(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு, வத்தளை, பியகம, கொலன்னாவை, கடுவளை, சீதாவாக்கை, தொம்பே, ருவான்வெல்ல, தெஹியோவிட்ட முதலான பகுதிகளில் கங்கையை அண்டி வாழும் மக்கள் வெள்ளப் பெருக்கு நிலை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.