உள்நாடு

மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டம்
திவுலப்பிட்டிய காவல்துறை அதிகாரப்பிரிவு – பலுகஹாவெல கிராம சேவகர் பிரிவு

காலி மாவட்டம்
அஹங்கம காவல்துறை அதிகாரப்பிரிவு – கரதுன்கொட, கொவியபான, கஹவன்னாகம மற்றும் தொம்மன்கொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

ஹபராதுவ காவல்துறை அதிகாரப்பிரிவு – லுனுமோதர, பொனவிஸ்டா, கட்டுகுருன்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

இரத்தினப்புரி மாவட்டம்
பெல்மடுல்ல காவல்துறை அதிகாரப்பிரிவு – தெனவக பாதகட மற்றும் திப்பிடிகல கிராம சேவகர் பிரிவுகள்

குருவிட்ட காவல்துறை அதிகாரப்பிரிவு – குருவிட்ட கிராம சேவகர் பிரிவும், தெல்கமுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நகரப்பகுதி

இதேவேளை, மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவும், அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட போடைஸ் கிராம சேவகர் பிரிவின் கொனகல்ல மற்றும் 30 ஏக்கர் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளது

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

தேசிய கல்வியியல் கல்லூரி புதிய மாணவர்களுக்கான அறிவித்தல்