(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று(11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், நிலைமை கட்டுக்குள் வராதவிடத்து எதிர்வரும் நாட்களில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.