உள்நாடு

இன்று முதல் விசேட முதல் பொலிஸ் சோதனை

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் கொவிட்19 தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை, பொதுப் போக்குவரத்தின்போது மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பேருந்து, டெக்ஸி மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக இன்று(10) விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, பொதுப்போக்குவரத்து தொடர்பான பரிந்துரைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

    

Related posts

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்

பயங்கரவாதம் என்ற உலகளாவிய சவாலை வெற்றி கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்

பண்டாரகம – அடுளுகமை பகுதி முடக்கம்