(UTV | கொழும்பு) – கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித பொருளாதார சிக்கலும் இல்லை. ரஷ்யாவிடமிருந்து 13.5 ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய வாராந்தம் ஒரு இலட்சம் என்ற அடிப்படையில் கட்டம் கட்டமாக அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை முதற்கட்டமாக ஒரு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பிரிதொரு தடுப்பூசியை வழங்க முடியுமா என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.
எனவே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உத்தியோகபூர்வமாக இது தொடர்பில் அறிவிக்கப்படும் வரை மாற்று தடுப்பூசிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.