உள்நாடு

நாளை முதல் சில ரயில் சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதன் காரணமாக நகரை அண்மித்த மற்றும் தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளையில் இருந்து இவ் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கான 1001, , கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி மற்றும் கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கான 1009/1010 , கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான 4003, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான 4021 மற்றும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான 4022 கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கான 6075, கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்த வரைக்குமான 8054 கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான 4017 ஆகிய இடங்களுக்கான ரயில் சேவைகள் மே மாதம் முதலாம் திகதியிலிருந்தும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான 1002, பொலன்னறுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான 6076 , கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கான 1015 பெலியத்தையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான 8055 , காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு​ கோட்டைக்கான 4018 ஆகிய ரயில்கள் சேவைகள் மே மாதம் 2ஆம் திகதியிலிருந்தும் இரத்துசெய்யப்படவுள்ளன.

அத்துடன், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1016 ரயில் சேவை மே மாதம் 3ஆம் திகதியிலிருந்து இரத்து செய்யப்படவுள்ளதாக திணைக்களம்அறிவித்துள்ளது.

 

Related posts

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் சிஐடி அழைப்பு

ரயில்வே சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்