(UTV | மாத்தளை ) – மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் பன்னல பொலிஸ் அதிகார பிரதேசம் மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ காவல்துறை அதிகார பிரிவின் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.