உலகம்

ஜோர்தானிலும் ஒட்சிசன் தட்டுப்பாடு : சுகாதார அமைச்சர் பதவி நீக்கம்

(UTV |  ஜோர்தான்) – ஜோர்தானில் கொரோனா நோயாளிகள் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் இறந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஜோர்தான் நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 7 பேர் உயிரிழந்த விவகாரம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்துள்ள ஜோர்டான் அரசு சுகாதாரத்துறை அமைச்சரான நாதிர் ஒபேய்தத்தை பதவி நீக்கம் செய்துள்ளது.

Related posts

ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

டிசம்பரில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிமுகம்