(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
நாட்டில் தற்பொழுது காணப்படும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பின்னரே காணப்படுகின்றதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .
இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களை ஏழு நாட்களுக்குப் பிறகு வீடுகளுக்கு அனுப்ப முடியாது என்றும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.