விளையாட்டு

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 541 ஓட்டங்கள்

(UTV | கண்டி) –  சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 541 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட திர்மானித்தது.

அதன்படி, போட்டியின் மூன்றாவது நாளான இன்று 173 ஒவர்களுக்கு முகங்கொடுத்து 541 ஓட்டங்களை பெற்றிருந்த போது பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பில் நஜ்முல் ஹொசைன் சான்டோ 163 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அணித்தலைவர் மோமினுல் ஹக் 127 ஒட்டங்களையும், தமிம் இக்பால் 90 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். முஸ்பிகுர் ரஹீம் 68 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்துள்ள இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 6 ஒட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டி கண்டி பல்லேகெல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த வாரம் முதல் ரக்பி லீக் போட்டிகள் நடைபெறும்

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்…

மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் சஹீட் அப்ரிடி