உள்நாடு

ஏப்ரல் 21 : இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆராதனை

(UTV | கொழும்பு) – கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனை நிகழ்வுகளின் காரணமாக, தேவாலயத்திற்கு அண்மையிலுள்ள சில வீதிகளில் நாளை(20) மாலை 4 மணி முதல் மறுநாள் (21) நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, புனித அந்தோனியார் மாவத்தை (ஜிந்துபிட்டி சுற்றுவட்டத்திலிருந்து கொச்சிக்கடை தேவாலயம் திசையாக உட்பிரவேசித்தல் மற்றும் வெளிச் செல்லல்), ராமநாதன் மாவத்தை (ஹெட்டியாவத்தை சந்தி முதல் கொச்சிக்கடை தேவாலயம் திசையாக உட்பிரவேசித்தல் மற்றும் வெளிச் செல்லல்), கிறிஸ்டி பெரேரா மாவத்தை (ஜம்பட்டா வீதி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் நோக்கி உட்பிரவேசித்தல் மற்றும் வெளிச் செல்லல்) ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் கீழ்காணும் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளது.

ஹெட்டியாவத்தையிலிருந்து புறக்கோட்டை செல்லும் வாகனங்கள் :
ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, சங்கமித்தா மாவத்தை, மஹாவித்தியாலய மாவத்தை வழியாக புறக்கோட்டை நோக்கி பயணிக்க முடியும்.

புறக்கோட்டையிலிருந்து ஹெட்டியாவத்தை செல்லும் வாகனங்கள் :
ரெக்லமேஷன் வீதி, சீனா வீதி, ஐந்துலாம்பு சந்தி சுற்றுவட்டம், ஆட்டுப்பட்டித்தெரு, மஹா வித்தியாலய மாவத்தை, ஆமர்வீதி சமிக்ஞை, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை ஊடாக ஹெட்டியாவத்தை நோக்கி பயணிக்க முடியும்.

 

Related posts

BreakingNews : ICC யிலிருந்து இலங்கை அணிக்கு அதிரடி தடை

துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் இன்றும் விசாரணைக்கு

மருதானையில் ரயில் தடம் புரள்வு