உள்நாடு

ராஜபக்ஷ பிடியில் சிக்கிய விஜயதாசவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை [VIDEO]

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விஜயதாச ராஜபக்ஷ விமர்சனம் செய்த காரணத்தினால் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ஷவின் அரசியல் வரலாறு மற்றும் நடத்தைகளை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை கடுந்தொனியில் இழிவாக மிகவும் கீழ்த்தரமாக திட்டியதாக விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜயதாச ராஜபக்ஷவின் ஊடக சந்திப்பு [ஏப்ரல் 16ம் திகதி 2021]

Related posts

வாகனம் நிறுத்துவது குறித்து இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளில் இறுக்கம்

போக்குவரத்து துறையில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளும் ரணில் : இனி மின்சார பேருந்துகளுடன், E- ticketing வசதி