உலகம்

கியூபாவின் ராஹுல் காஸ்ட்ரோ பதவி விலகல்

(UTV |  கியூபா) – கியூபாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

அதன்படி, காஸ்ட்ரோ குடும்பத்தின் ஆறு தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மாநாட்டின் முதல் நாள் உரையின் போது, “ஆர்வமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனப்பான்மையும் நிறைந்த” ஒரு இளைய தலைமுறையினருக்கு அதிகாரத்தை ஒப்படைப்பதாக அவர் கூறினார்.

ராஹுல் காஸ்ட்ரோ தனது 89வது வயதில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அவருக்கு அடுத்ததாக பதவியேற்க உள்ளவர், கட்சியின் நான்கு நாள் மாநாட்டின் தெரிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டு புரட்சியுடன், ஆரம்பித்த தலைமைத்துவ பயணம், 6 தசாப்தத்தின் பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது. பிடல் காஸ்ட்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு தலைமைத்துவத்தை தமது சகோதரரான ராஹுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தனது 90 ஆவது வயதில் பிடல் காஸ்ட்ரோ காலமானார்.

Related posts

மியன்மாரில் மேலும் நீடிக்கப்பட்ட அவசரநிலை!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்