கிசு கிசு

ரஞ்சனுக்காக ​எம்.பி பதவியை துறக்கும் ஹரின்

(UTV | கொழும்பு)  – ​மே மாதம் முதலாவது அமர்வில் தான், ரஞ்சன் ராமநாயக்கவுக்காக அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தான் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாகவும் அரசாங்கம் அதனை நிறை​வேற்றினால் தான் மீண்டும் இந்த நாட்டு மக்களுக்கு தனது முதுகெலும்பை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மே மாதம் கூடவுள்ள பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது, ஹரின் பெர்ணான்டோவால் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல்களுக்கமைய ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் பாராளுமன்றம் வருவதற்காக, தனது தேசியப் பட்டியல் ஆசனத்தை தியாகம் செய்யவுள்ளாரென்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related posts

ஹர்பஜனுக்கு அகவை 40

தாமரை கோபுரத்தினால் திடீரென ஏற்பட்ட ஆபத்து!

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ஜி.எஸ்.விதானகே நியமனம்