விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் அர்ஜுன டி வில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு நேற்றைய தினம் தடுப்பூசியின் முதல் டொஸ்ஸும், மே 25 இரண்டாவது டொஸ்ஸும் அணிக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இலங்கை – பங்களாதேஷ் அணிக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டிக்கெட் விற்பனை: SLC தனது முக்கிய தீர்மானங்களை அறிவித்தது

உலகில் முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்

யுபுனுக்கு தீர்மானமான நாள் இன்று