உள்நாடு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனால் நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துமாறு அந்த சபை அறிக்கையொன்றை வெளியிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலம் என்பதால் நீர்ப் பாவனை அதிகரித்துள்ளது. நீர் வழங்கல் நிலையங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் 24 மணிநேரமும் பொதுமக்களுக்கு ஒரே அழுத்தத்திலான நீர் விநியோகத்தினை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உயர் நில பகுதிகளின் பாவனையாளர்களுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகமே இடம்பெறக்கூடும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

இன்றும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு

இன்று இதுவரையில் 282 பேருக்கு கொரோனா உறுதி

ரணில் தோற்றால் முழு நாடும் தோல்வியடையும் – மீண்டும் வரிசை உருவாகும் – ராமேஷ்வரன் எம்.பி

editor