உலகம்

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

(UTV |  வொஷிங்டன்) – அமெரிக்காவில் ஏப்ரல் 19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.

உலகம் முழுவதும் 133,002,022 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,885,153 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 107,248,066 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 22,868,803 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,559,438 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 570,247 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 24,120,970 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்காவில் ஏப்ரல் 19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Related posts

இதுவரை 231 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளன

ரோஹிங்கியா மக்களை மியன்மார் அரசு பாதுகாக்க வேண்டும்

கஜகஸ்தானில் அவசர கால நிலை பிரகடனம்