உள்நாடு

பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை

(UTV | கொழும்பு) – கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வோர் தொடர்பில் பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் சில வேளைகளில் குறிப்பின்றி அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டிய நிலமைக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி எவ்வாறாயினும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில், சுகாதார அமைச்சினால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

மின் கட்டண நிலுவை இருந்தால் அதை செலுத்த தயார் – நாமல் கட்சியின் செயலாளருக்கு அறிவிப்பு

இரத்மலானையில் ரயில் சாரதிப் பயிற்சி பாடசாலை

மேலும் மூவருக்கு தொற்று, 35 பேர் பூரண குணம்