விளையாட்டு

கோஹ்லிக்கு போட்டியாக பாபர் அசாம்

(UTV | பாகிஸ்தான்) –  இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் சாதனையைப் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் தகர்த்துள்ளார்.

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் 103 ஓட்டங்களை விளாசி அணிக்கு மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

பாபர் அசாமுக்கு இது 78ஆவது ஒருநாள் இன்னிங்ஸாகும். இதில் சதம் விளாசியதன் மூலம் மொத்தம் 13 சதங்கள் எடுத்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ஓட்டங்கள் அடித்த வீரராக மாறியுள்ளார். இதற்குமுன் தென்னாப்பிரிக்க வீரர் ஹாஷிம் அம்லா 83 இன்னிங்ஸில் 13 சதம் அடித்திருந்தார். அதேபோல், இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி 86 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். இரண்டையும் தற்போது பாபர் அசாம் தகர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி

ஹர்திக் பாண்ட்யாவின் ஐ.பி.எல். சிறந்த பதினொருவர் அணி வெளியானது

இறுதி ஓவரில் தப்பு நடந்து விட்டது..-ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேன