உள்நாடு

‘சினோபார்ம்’ தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமையவே கொண்டு வரப்பட்டதாகவும், அவை முதற்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீனப் பிரஜைகளுக்கு செலுத்தப்பட உள்ளதுடன், சீன தூதரகத்துடன் இணைந்து அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நாளை(05) முதல் முன்னெடுக்கப்பட உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெற வேண்டிய 500,000 ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என்றும் இந்தியாவில் கொவிட் – 19 பரவல் உக்கிரமடைந்தன் காரணமாகவே அவை தாமதாகி கிடைப்பதாகவும், அவற்றை ஏற்றும் பணிகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் 13 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதாக ரஷ்ய அரசாங்கம் உறுதி அளித்துள்ளதாகவும் ஜூன் இறுதி வாரத்திற்குள் அவை கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் முழு தொகையும் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்தார்.

Related posts

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

சூழ்ச்சி வலையில் மைத்திரி

இவ்வாண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு