உள்நாடு

புத்தாண்டை முன்னிட்டு கொவிட் தடுப்புக்கான செயற்பாடுகள் மீளாய்வு

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அமர்வு நடைபெற்றது.

இதன்போது தொற்றாளர்களை இனம் காணும் நடவடிக்கைகள், புதிய முன்னேற்றங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன். புதிய வைரஸ் பரவலை முகாமைத்துவம் செய்தல் நிர்வகித்தல், பொதுமக்களின் நடத்தைகள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் வகையிலான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கொவிட் தடுப்புக்காக தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் வலியுறுத்தினார்.

அத்தோடு நாடளாவிர ரீதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற போதிலும், சுகாதார அறிவுரைகளை வலுவாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய செயலணியின் தலைவர், அண்மையில் பண்டிகை காலம் வரவிருப்பதால் பாதுகாப்புச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக தக்கவைத்து கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

Related posts

எரிவாயு கொள்கலன்களின் கலவை குறித்த ஆய்வக அறிக்கை இன்று மாலை

டிப்போக்களில் தற்போது போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது -SLTB

மைத்திரி மீதான தடை மேலும் நீடிப்பு!