(UTV | கொழும்பு) – பொய்யான பிரச்சாரங்கள் காரணமாக சீனாவின் நன்கொடையாக இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளுக்கு நாள் தாமதமாவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதன் காரணமாக, தடுப்பூசி ஆராய்ச்சி குறித்த குழு வல்லுநர்கள் தங்கள் வேலையைச் செய்ய அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.