(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சகல தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினம் நாளை(04) கொண்டாடப்படுகின்றது.
இதற்காக முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் அங்கத்தவர்கள் 12,047 பேர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.