விளையாட்டு

ஒசாகா அதிர்ச்சி தோல்வி

(UTV | ஜப்பான்) – மயாமி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–2’ ஜப்பானின் நவோமி ஒசாகா, 25வது இடத்தில் உள்ள கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி மோதினர். முதல் செட்டை 0–6 என இழந்த ஒசாகா, 2வது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஒசாகா 0–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 23 போட்டிகளில் வெற்றி பெற்ற ஒசாகாவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மற்றொரு காலிறுதியில் கனடாவின் பியான்கா, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் டார்மோ மோதினர். அபாரமாக ஆடிய பியான்கா 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related posts

பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டிற்கு தயாராகும் இலங்கை

முத்தத்தால் சர்ச்சை : கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் தாயார், உண்ணாவிரதத்தில்

சாமிக்க கருணாரத்ன இனி விளையாடுவதற்கு தடை!