உலகம்

‘எவர் கிவன்’ பயணத்தினை தொடங்கியது

(UTV |  எகிப்து) – எவர் கிவன் கப்பல் நேர்கோட்டில் நிறுத்தப்பட்டு, தனது பயணத்தை இந்த கப்பல் தொடங்கியது என தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கு இடையே போக்குவரத்துக்கு பெரும் பாலமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழித்தடத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கால்வாய் வழியே பயணித்த எவர்கிவன் என்ற சரக்குக்கப்பல் கால்வாயின் குறுக்கே கிடைமட்டமாக சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கப்பல் சிக்கிய பகுதிகளில் மணலை தோண்டி ஆழப்படுத்தி பின்னர் இழுவை படகுகளை கொண்டு கப்பலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி எவர் கிவன் கப்பல் தரைதட்டிய இடத்தில் 18 மீட்டர் ஆழத்திற்கு 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று இந்த கப்பல் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு எவர் கிவன் கப்பல் நேர்கோட்டில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தனது பயணத்தை இந்த கப்பல் தொடங்கியது. கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.

Related posts

பேரூந்து தீ பிடித்ததில் 46 பேர் பலி

ஈரான் செல்லும் அலி சப்ரி!

கப்பலில் பரவியது கொரோனா வைரஸ் : 3,700 பயணிகளின் நிலை கவலைக்கிடம்