(UTV | கொழும்பு) – நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களை இலங்கையில் தடை செய்வதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை (31) முதல் குறித்த பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்திக் போத்தல்கள், 20 மைக்ரோனுக்கு குறைவான லன்ச் ஷீட்கள், சஷே பக்கட்டுகள் (உணவு அல்லாத மற்றும் மருந்து அல்லாதவை), கொட்டன் பட் மற்றும் ஊதப்பட்ட பிளாஸ்டிக் பொம்மைகள் ஆகியவை அவற்றில் உள்ளடங்குகின்றன.