விளையாட்டு

நியூசிலாந்து அணியுடன் கவனமாக மோத வேண்டும்

(UTV |  பங்களாதேஷ்) – நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும் என பங்களாதேஷ் அணியின் தலைவர் மொஹமதுல்லா தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி மூன்று பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

இந்நிலை வீரர்கள் அவதானத்துடன் செயற்படும்பட்சத்தில் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை கைப்பற்ற முடியும் என பங்களாதேஷ் அணி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் களத்தடுப்பில் காணப்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஒரு நாள் போட்டித் தொடரை தமது அணி தவறவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டித் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஷாகித் அப்ரிடியால் பெற முடியாத சாதனையை எலிஸ் பெர்ரி பெற்றார்

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)