(UTV | இந்தியா) – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(27) லேசான நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள், இந்திய ஜனாதிபதி நலமாக உள்ளதாகவும், வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ராம்நாத் உடல்நிலைக் குறித்து அவரது மகனிடம் தொடர்பு கொண்டு இந்திய பிரதமர் மோடி விசாரித்ததாக இந்திய பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.