(UTV | கொழும்பு) – ஏப்ரல் முதலாம் திகதி முதல் சதொச, மொத்த விற்பனை கூட்டுறவு நிலையங்கள், பிரதான நிலை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு கிலோவை 95 ரூபாவிற்கும் ,நாட்டரிசி ஒரு கிலோவை 97 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவிற்கு அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
சதொச தலைவர், மொத்த கூட்டுறவு விற்பனை நிறுவன ஆணையாளர், பிரதான நிலை விற்பன நிலையங்களின் பிரதானிகள் ஆகியோருடன் நேற்று முன்தினம் விவசாயத்துறை அமைச்சில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.