உலகம்

பிரதமர் கொலை முயற்சி : 14 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

(UTV |  பங்களாதேஷ்) – பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற 14 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்ற விழா ஒன்றில் மேடையில் வெடிக்குண்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குண்டு செயலிழக்க செய்யப்பட்ட நிலையில் அதை வைத்த பயங்கரவாதிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக இந்த சதி வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிடிபட்டுள்ள மேலும் 14 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்குட்படுத்திய நிலையில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 987ஆக அதிகரிப்பு

ஸ்லோவாக்கியாப் பிரதமர் மீதான துப்பாக்கிசூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில்

கொவிட்-19 வைரஸ் : ஜப்பானில் மேலும் 70 பேருக்கு உறுதி