கேளிக்கை

தனுஷின் அசுரனுக்கு தேசிய விருது

(UTV |  இந்தியா) – நான் எதற்காகவும் போராடவில்லை. அவர்களாகவே தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், அசுரனுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் கொடுத்துள்ளனர் என்று தேசிய விருதுகளுக்கான நடுவர் குழுவில் இருந்த கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இந்த முறை தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளதால் பிரபலங்களும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

67வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. பிற ஆண்டுகளை போன்று இல்லாமல் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறனின் அசுரன் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கே.டி. என்கிற கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு கிடைத்துள்ளது.

இம்முறை தமிழ் திரையுலகிற்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. விருதுகளுக்கான நடுவர் குழுவில் இயக்குநரும், இசையமைப்பாளரும், பாடல் ஆசிரியருமான கங்கை அமரன் இருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது குறித்து கங்கை அமரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாங்கள் சுமார் 105 முதல் 106 படங்கள் பார்த்தோம். பல்வேறு மொழி படங்கள் போட்டியில் இருந்ததால் தேர்வு செய்வது எளிதாக இல்லை என்றார்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அதிக விருதுகள் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு 7 முதல் 8 விருதுகள் கிடைத்துள்ளது. நான் எதற்காகவும் போராடவில்லை. நடுவர் குழுவை சேர்ந்தவர்களாகத் தான் அசுரனையும், தனுஷையும் தேர்வு செய்தார்கள். ஒத்த செருப்பு படத்திற்கு எந்த பிரிவில் விருது வழங்குவது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று கங்கை அமரன் கூறினார்.

Related posts

ரஜினிகாந்தை வைத்து பேய்படம்?

காதல் இயக்குனருக்கு வாய்ப்பளித்த யுவன்…

ஒரே நாளில் சமந்தாவின் இரு படங்கள் ரிலீஸ்