வணிகம்

இலங்கையில் சிறந்த சேவையாளர் இலச்சினைக்கான விருது வழங்கும் நிகழ்வில் Airtel Lanka விருதுக்கு தகுதி

(UTV | கொழும்பு) –  நன்மதிப்பைக் கொண்ட தொழில் வழங்குநராக தமது பெயரை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த 2020 இலங்கையின் சிறந்த சேவை வழங்குநர் இலச்சினைக்கான விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனம் மனித வள முகாமைத்துவத்திற்கான புத்தாக்க அணுகுமுறைக்கு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டின் முன்னணி நிறுவனமாக தமது தலைமைத்துவத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் ‘சிறந்த சேவை வழங்குநர் இலச்சினை’ தொடர்பில் எயார்டெல் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் எயார்டெல்லின் திறன் மேம்பாட்டு முகாமையாளர் சாரா ராஜகுரு ‘ஆண்டின் இளம் மனித வள நிபுணர்’ (Young HR Professional of the Year’) விருதுக்கு தகுதிபெற்றார், அதன் மூலம் எயார்டெல்லின் அதிகாரம் மற்றும் வேலை செய்வதற்கு சிறந்த சூழலை ஏற்படுத்துவதில் தொடர்ந்து உறுதியளித்துள்ளது.

பெற்றுக் கொண்ட இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஷ் சந்திரா, “2020 உண்மையிலேயே சவால்கள் நிறைந்த வருடமாக இருந்த போதிலும் எதிர்பாராத மாற்றங்களுக்கு துரிதமாக மாறுவதற்கு அவர்களிடமிருந்த திறமை, பாரிய முயற்சி மற்றும் எதிர்த்து செயற்படுதல் போன்ற பெறுமதிகளை எமது ஊழியர்கள் உண்மையாக இங்கு பிரதிபலித்தனர். அத்துடன் எமது பலமான மனித வள நடவடிக்கைகளும் இதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கின.” என தெரிவித்தார்.

உலக மனித வள மேம்பாட்டு (HRD) காங்கிரஸினால் நடத்தப்படும் இலங்கையில் சிறந்த சேவையாளர் இலச்சினை விருது வழங்கும் நிகழ்வின் நோக்கமானது மூலோபாய மனித வள முறைமைகள் மற்றும் விற்பனை தொடர்பாடல் முயற்சியின் ஊடாக திறனை மேம்படுத்துதல், அதனை தக்க வைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

எயார்டெல் லங்கா மனித வள முறைமைகள் தொடர்பில் மூலோபாயமானது, ஊழியர் நட்பு அணுகுமுறைகளை பின்பற்றுவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ள ஊழியர்களுக்கு உச்ச அளவு திறன்களை அடைவதற்கு தேவையான பயிற்சிகள், அறிவு மற்றும் ஏனைய அனைத்து கருவிகளையும் பெற்றுக் கொடுத்து சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது.

இலங்கையில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு 2009 ஜனவரி 12இல் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதிய எயார்டெல் (எயார்டெல் லங்கா) 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

Related posts

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்

பேலியகொடை மீன் சந்தை 3 நாட்களுக்கு பூட்டு

நீரிழிவு நோயைத் தடுக்க “நீரோகா” எனும் நெல் வகை அறிமுகம்