(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான ரஞ்சன் சில்வாவை படுகொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்படும் பிரதான சந்தேக நபரை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
‘ரத்மலானே சுத்தா’ எனப்படும் பிரதான சந்தேக நபரே இவ்வாறு சுமார் இரண்டரை கிராம் எடையுடைய போதைப் பொருளுடன் அங்குலான பொலிசாரால் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருள் பயன்பாட்டுக்குத் தீவிர அடிமையான நபர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மூன்று வருடங்களுக்கு பின்னர் குறித்த சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.