கேளிக்கை

‘காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா

(UTV | இந்தியா) – ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா 3’ படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், சூர்யா, சரத்குமார், விஷால், பிருதிவிராஜ், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, ராய் லட்சுமி, நிக்கி கல்ராணி, சுமலதா, ஐஸ்வர்யா அர்ஜுன், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நிக்கி தம்போலி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

 

Related posts

ஆபாச வசனம் பேசியது ஏன்?

காட்டு நாய்கள் 14 உடன் மோதும் ஆண்ட்ரியா

அஜித் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!