விளையாட்டு

பாபர் அசாம் மீது பாலியல் வழக்கு

(UTV |  பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் மீது வழக்கு தொடருமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதலபாதாளத்தில் இருக்கும் அணியின் நிலைமையை அவர் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்போது தன் தலைமையில் பாகிஸ்தான் அணியை அவர் நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார். பள்ளியில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்ததாகவும் பாபர் கிரிக்கெட் வீரராக ஆவதற்கு முன்பே அவரை தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டு பாபர் காதலை வெளிப்படுத்தியதாகவும், தன்னிடம் உடலுறவு கொண்டு தான் கர்ப்பமானது தெரிந்ததும் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாபர் அசாமின் தலைமைப் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் அந்த பெண் புகார் கொடுத்து எப் ஐ ஏ என்ற அமைப்பு பாபர் அசாமை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியது. ஆனால் அவருக்கு பதிலாக அவரது சகோதரரே ஆஜரானார். இந்நிலையில் இப்போது பாபர் அசாம் மீது வழக்கு தொடர வலியுறுத்தி லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி 16 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

எந்தவொரு மனிதனுக்கும் கடினமான நேரங்கள் வரலாம் – வனிந்து ஹசரங்க.

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு