வணிகம்

கொரோனாவிலும் தாக்குப்பிடிக்கும் லாம்போர்கினி

(UTV | இத்தாலி) – இதுவரையான காலத்திலேயே லாம்போர்கினி கார் நிறுவனம் 2020-ம் ஆண்டில் தான் அதிக இலாபம் பார்த்திருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் இரண்டு மாத காலம் இத்தாலியில் இந்நிறுவனத்தின் ஆலை மூடப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப் பெரிய ஆடம்பர கார் நிறுவனங்களில் லாம்போர்கினியும் ஒன்று. அந்நிறுவனம் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு கடந்த 2020-ம் ஆண்டில் இலாபம் கண்டிருக்கிறது.

“நாங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிட்டோம்” என லாம்போர்கினியின் முதன்மைச் செயல் அதிகாரி ஸ்டீஃபன் விங்கில்மேன் கூறியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டின் விற்பனையை விட, 2020-ம் ஆண்டில் விற்பனை கொஞ்சம் குறைவு தான் என்றாலும், 2020-ம் ஆண்டில் லாம்போர்கினி அதிக விலை கொண்ட சூப்பர் கார்களை விற்று இருக்கிறது. எனவே அதன் இலாபமும் அதிகரித்திருக்கிறது.

லாம்போர்கினி சொகுசு கார்களுக்கு சீனாவில் அதிக தேவை ஏற்பட்டு வருகிறது. எனவே முதல் முறையாக லாம்போர்கினி கார்கள் அதிகம் விற்கப்படும் நாடுகள் பட்டியலில், இந்த ஆண்டில் முதல் முறையாக ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சீனா இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விமான பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் தடை

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. ஆயிரம் கனவானது