(UTV | அம்பாறை) – அம்பாறையில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு பரசூட் வீரர்கள் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் ஒரு விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து பரசூட் வீரர்கள் குதித்த போது பரசூட்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு சிக்குண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மற்றைய விமானப் படை வீரர் சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.