கிசு கிசு

ஈஸ்டர் தாக்குதல் : அசாத் சாலிக்கு 18 மாதங்கள் தடுப்புக்காவல்

(UTV | கொழும்பு) – பங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை 18 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக அசாத் சாலி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை 18 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடியும்.

அதற்கு முன்னர் விசாரணைகள் நிறைவடைந்தால் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் ப்ரியங்கா சோப்ராவின் புகைப்படம் உள்ளே…

ஒலிம்பிக்கை தாக்கியது கொரோனா

சில திட்டங்களை கையாண்டு போட்டியில் வெற்றி பெறுவோம் – திமுத்