வணிகம்

தொலைபேசி சேவை தொடர்பில் இலங்கைக்கு வரும் புதிய வசதி

(UTV | கொழும்பு) –  கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசிகளின் எண்களை மாற்றாமல் விரும்பிய வலையமைப்பை மாற்றும் வசதி, இலங்கையில் இந்த வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, இனிமேல் சேவை வழங்குனரை மாற்றினாலும், இருக்கின்ற தொலைபேசி இலக்கத்தை நிலையானதாக வாடிக்கையாளர்கள் பேண முடியும்.

இந்த நடைமுறைக்கு இலங்கையிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்த சேவை செயல்படுத்தப்படும். ஏனெனில் பாகிஸ்தானில் இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாய வரி

மீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்…

சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு