உள்நாடு

பிரதமர் பங்களாதேஷ் நோக்கி பறந்தார்

(UTV | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் நோக்கி பயணித்துள்ளார்.

இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷின் தந்தையாக கருதப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அங்கு பயணித்துள்ளார்.

அத்துடன் இன்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு விசேட உரையும் ஆற்றவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர், ஜனாதிபதி, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

விவசாயம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

மாகாண சுகாதார பணிப்பாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

சிங்கள இனவாத ஊடகங்களில் தினமும் என்னைப்பற்றிய அவதூறுகளே! – ரிஷாட் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் திரண்டு வந்து சங்குக்கு வாக்களியுங்கள் – சி.வி. விக்னேஸ்வரன்

editor