(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த இறுதி அறிக்கையின் பிரதிகளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் சிங்கள மொழியில் வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சி கோரியிருந்த நிலையில், அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று(17) இடம்பெற்றபோதே, ஆளும் தரப்பு இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேற்படி அறிக்கை மீதான விவாதத்துக்கு, எதிர்க்கட்சிக்கு இரண்டு தினங்களை ஒதுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.