விளையாட்டு

பாகிஸ்தானுக்கு இம்ரான் எப்படியோ இலங்கைக்கு ரணதுங்க

(UTV | கொழும்பு) – கிரிக்கெட்டின் அச்சமூட்டக்கூடிய ஒரு தொடக்க வீரர் இருந்தார் என்றால் அது சனத் ஜெயசூரியா என்றால் அது மிகையானதல்ல. எதிரணியின் பந்து வீச்சை, எப்படிப்பட்ட பந்து வீச்சையும் சமாளிப்பவர்.

1996 உலகக் கோப்பையை இலங்கை வென்ற போது சனத் ஜெயசூரியா, ரொமேஷ் கலுவிதாரன என்றால் உலகமே அஞ்சும். உண்மையில் அந்த உலகக்கோப்பைக்கு முன்பாக 1994-95 ஆஸ்திரேலிய தொடரில் பல ஆச்சரியங்களை இலங்கை நிகழ்த்தியது. ஆஸ்திரேலியாவின் 247 ஓட்டங்கள் இலக்கை கலுவிதாரன தனது அபாரமான 139 ஓட்டங்களினால் வெகு எளிதாக விரட்டினார், இத்தனைக்கும் கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் உச்சத்தில் இருந்த காலக்கட்டம்.

எப்படி 1982 மே.இ.தீவுகள் தொடர் இந்திய அணிக்கு 1983-ல் உலகக்கோப்பையை வெல்ல உதவியதோ, அப்படி இலங்கை 1996-ல் அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் உலகக்கோப்பையை வெல்ல உதவியது 1994-95 ஆஸ்திரேலிய தொடர் ஆகும்.

இந்நிலையில் 1996 உலகக்கோப்பையை வென்றது பற்றி தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அளித்த பேட்டியில் சனத் ஜெயசூரியா தெரிவிக்கையில்;

.. அப்பா! உலகக்கோப்பையை வென்று 25 ஆண்டுகள் ஓடிவிட்டது. காலம் எப்படி பறக்கிறது பாருங்கள். அந்த அனுபவத்தின் ஒவ்வொரு துளையையும் நான் உற்சாகமாக பார்க்கிறேன். நாங்கள் எங்கள் பாணி கிரிக்கெட்டை ஆடினோம், அதாவது அச்சமற்ற அதிரடி கிரிக்கெட். எனக்கு கெப்டன் ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, துலிப் மெண்டிஸ், கோச் வாட்மோர் முழு ஆதரவளித்தனர்.

ஒரு சிறு 14 வீரர்கள் கொண்ட அணி ஒரு குடும்பமாக மாறியது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் இலங்கை வந்து ஆட முடியாது என்று கூறிவிட்டனர், ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடியது. இது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது…

ஆம், கெப்டன் அர்ஜுன ரணதுங்கா, இலங்கைக்கு ஒரு இம்ரான் கான் தான், பாகிஸ்தானுக்கு இம்ரான் எப்படியோ இலங்கைக்கு ரணதுங்கா. இளம் அணியை அற்புதமாக வழிநடத்தினார், ஊக்கமளித்தார்.

நிறைய வீரர்கள் கொழும்பில் இருப்பவர்களல்ல, அவர்களை ஒருங்கிணைப்பது சாதாரணமல்ல. நான் தெற்குப்பகுதி, முரளிதரன் கண்டி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலை.

ஆனால் அர்ஜுனா ரணதுங்கா வீடே எங்கள் குடும்பம் ஆனது, அனைவரையும் தன் வீட்டிலேயே தங்க வைத்தார் அர்ஜுனா. அவர் எங்களுக்கு தந்தை போன்றவர். அர்ஜுனா எங்களை ஆக்ரோஷமாக ஆட பணித்தார். அரவிந்தா வேறு இருந்தாரா, நிறைய விளையாடினோம். அந்தக் காலக்கட்டத்தை மறக்க முடியாது.

உலகக்கோப்பைக்கு முன்னர்தான் முரளிதரனை த்ரோ செய்கிறார் என்று புகார் அளித்தார்கள். அப்போது அர்ஜுனா ரணதுங்காதான் அவருடனேயே இருந்தார், அவருடன் பரிசோதனைக்கெல்லாம் சென்றார். ரணதுங்காவின் கீழ் பாதுகாப்பாக உணர்ந்தோம்…” என சனத் ஜெயசூரியா தெரிவித்திருந்தார்.

 

Related posts

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் அறிமுகம்