(UTV | ஜெனீவா) – Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசி பயன்பாட்டினை நிறுத்துவதற்கு எந்தவிதமான அடிப்படை காரணமும் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் ஏற்படும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் astrazeneca கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.