(UTV | இந்தியா) – இலங்கை கோரியுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி சம்பந்தமாக ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தியா – இலங்கை இடையிலான எட்கா உடன்படிக்கை சம்பந்தமாக 11 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.