உள்நாடு

அரசின் சீனி வரி மோசடி 1590 கோடி : சுனில் ஹந்துன்நெத்தியினால் அடிப்படை உரிமை மீறல் மனு

(UTV | கொழும்பு) – சீனி இறக்குமதியின் போது 15. 9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதிமன்றத்தில் இன்று(12) அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

“.. கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி முதல் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி வரையில் சீனி இறக்குமதியின் போது வரி மோசடி இடம்பெற்றிருக்காவிட்டால், 15 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கியிருக்க முடியும்

மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்ற போது அதனை நாமே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம்.

அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய ஆளும் கட்சியினர் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடி எனவும் தங்களது ஆட்சியில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.

எனினும் ஆட்சிக்கு வந்ததும் தண்டனை விதிக்கவில்லை. மத்திய வங்கி பிணை முறி மோசடி 1100 கோடி ரூபா, சீனி வரி மோசடி 1590 கோடி ரூபாவாகும்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள உதவுமாறு அரசாங்கம் 1000 கோடி ரூபாவினை உலக வங்கியிடம் கோரியது..” என சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேர் கைது

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலி பயணம்

மக்களைத் துண்டாடும் அரசியல்வாதிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – எஸ்.எம். சபீஸ்