(UTV | மாத்தளை) – மஹவெல பொலிஸ் பிரிவில் அங்கந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
நேற்று (11) முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் உயிர்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
16 வயதுடைய மாணவன் மற்றும் 26 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், அவர்கள் தலுபோத்தகம பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.