உலகம்

Johnson & Johnson கொரோனா தடுப்பூசிக்கு கனேடிய அரசு அனுமதி

(UTV |  கனடா) – அமெரிக்காவின் Johnson & Johnson கொரோனா தடுப்பூசி அவசர பாவனைக்கு கனேடிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நான்காவது கொரோனா தடுப்பூசியான Johnson & Johnson பாவணைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
கனேடிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றை தடுப்பூசியான Johnson & Johnson 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 38 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக Ottawa தெரிவித்துள்ளது.

அத்துடன் Johnson & Johnson தடுப்பூசியின் பயன்பாடு தொடர்பில் சாத்தியமான ஆதாராங்கள் காணப்படுவதாக கனேடிய பிரதான சுகாதா வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே செப்டெம்பர் மாதத்திற்குள் அனைத்த கனேடிய பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்திருந்த நிலையில் இதுவரை நான்கு சதவிகிதத்தினர் மாத்திரமே தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் Johnson & Johnson தடுப்பூசி அவசர பயன்பாடு தொடர்பில் எதிர்வரும் வாரம் தீர்மானிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்

‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா வழக்கு!

பெப். 6 வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு