உள்நாடு

நான்காவது நாளாக தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

(UTV | கிளிநொச்சி) – கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நான்காவது நாளாகவும் இன்றும் தொடர்கிறது.

கொவிட் தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை(03) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும்(06) இரணைதீவு பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை நேற்று(05) மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்பு தொடர்பில் ஆராய நெதர்லாந்திலிருந்து விசேட குழு

நள்ளிரவு முதல் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலை நிறுத்தம்

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு வவுனியாவில் பிரஜாவுரிமை வழங்கி வைப்பு