(UTV | கொழும்பு) – கண்டியில் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்பு தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பள்ளியகொட்டுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.