உள்நாடு

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலத்தை மே 31 வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் வழங்கிய அனைத்து துப்பாக்கி உரிமங்களையும் புதுப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 28ம் திகதியுடன் காலாவதியானது.

இருப்பினும், கொவிட் தொற்றுநோய் காரணமாக இந்த காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு அபராதமும் இன்றி அந்த காலகட்டத்தில் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

மீண்டும் உச்சம் தொட்ட கரட்டின் விலை!

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி – ஜனாதிபதி (Video)

வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு